உக்ரைனுக்கு கனடாவினால் மட்டுமே உதவி செய்ய முடியாது என பிரதி பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இயற்கை எரிவாயு குழாய் தொடர்பில் எடுக்கப்பட்ட கனடாவின் நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த எரிவாயு குழாய்கள் மூலம் ஜெர்மனிக்கு எரிபொருள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பழுதடைந்திருந்த எரிவாயு குழாய்கள் கனடாவில் பழுதுபார்க்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை கடினமானது என்ற போதிலும் சரியான தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனியர்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்குவதற்கு கனடா அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 3.4 பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை கனடா, உக்ரைனுக்கு வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஸ்யாவிற்கு எதிராகவும் கனடாவினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் எதிர்பார்க்கும் எல்லா உதவிகளையும் கனடாவினால் வழங்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.