ரஷ்யாவிற்கு எதிராக போரில் சண்டையிட கனடா 8 சிறுத்தை 2 ரக டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு உதவி
சமீபத்தில் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போரிட MiG-29 ரக போர் விமானங்கள் வழங்க வேண்டும் என போலந்து அறிவித்து இருந்தது.
ஆனால் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட இந்த MiG-29 ரக போர் விமானங்களை பெறும் நாடுகள் அவற்றை மூன்றாம் நாடுகளுக்கு அனுப்ப திட்டமிடும் போது, விற்பனை விதிகளின்படி, அதற்கு ஜேர்மன் ஒப்புதல் வழங்கி இருக்க வேண்டும்.
இந்நிலையில் அதற்கான ஒப்புதல் விண்ணப்பத்தை போலந்து அனுப்பி இருந்த நிலையில் ஜேர்மன் அதற்கு சில மணி நேரங்களில் ஒப்புதல் அளித்துள்ளது.
போலந்தை தொடர்ந்து கனடா
போலந்து தங்களது போர் விமானங்களை வழங்குவது தொடர்பாக அறிவித்து இருக்கும் இந்த நிலையில், கனடா தங்களது 8 சிறுத்தை 2 ரக டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் கனடா ஏற்கனவே 8 சிறுத்தை 2 ரக டாங்கிகளை அனுப்பி வைத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரியில் இந்த சிறுத்தை 2 ரக டாங்கிகள் 4 உக்ரைனுக்கு வழங்கியதாக கனடா அறிவித்து இருந்தது.
அவற்றை ஒப்பிடும் போது தற்போதைய வழங்கல் இரட்டிப்பு ஆகி இருப்பதுடன், அவற்றின் செயல்பாடு மற்றும் தந்திரோபாயங்கள் குறித்து உக்ரேனிய டேங்க் குழுவினருக்கு பயிற்சி அளிக்க 3 சிறுத்தை துப்பாக்கி சிமுலேட்டர்களை கனடா அனுப்பி வைத்துள்ளது, என்று அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியுள்ளார்.