ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை மறுதினம் நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைக்கப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஈரான் அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் விஜயத்தை நிறைவு செய்து, நாளை மறுதினம் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் இஸ்பஹான் நகர் மீது ஈரான் அண்மையில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டிருந்த நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடிக்குமாயின் ஈரானுடனான இலங்கையின் பொருளாதாரம் பாதிப்படையும் என பொருளாதா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.