எஸ்கெரிச்சியா கோலி (Escherichia coli) எனப்படும் பக்றீரியா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படும் பெருந்தொகையான பதனிடப்படாத மாட்டிறைச்சி உற்பத்தி பொருட்களை கனடாவின் உணவு பரிசோதனை முகவரமைப்பு மீள அழைத்துள்ளது.
ரொறென்றோவில் உள்ள இறைச்சிக் கூடமான ரைடிங்-ரீஜென்சி மீட் பெக்கர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து கடந்த காலங்களில் இவ்வாறு உற்பத்திப் பொருட்கள் மீளப் பெறப்பட்டன,
அதேவேளை, கியூபெக்கில் உள்ள ஆல்ஃபா மீட் பெக்கர்ஸ் லிமிற்றெட்டால், ஒன்ராறியோவில் உணவு அடிப்படைகளுக்கு ஏற்ப பொதியிடப்பட்ட இறைச்சியைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உணவு சேவை நிறுவனங்கள் மீள அழைக்கப்பட்ட பொருட்களை விற்கக்கூடாது என்று கனடா உணவு பரிசோதனை முகவரமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
கியூபெக் மற்றும் ஒன்ராறியோவில் உள்ள உணவக சங்கிலிகள் மற்றும் சில்லறை உணவு சங்கிலிகள் ஆகியவற்றிற்கு ஆல்ஃபா மீட் பெக்கர்ஸ் நிறுவனம், இறைச்சி உற்பத்தி பொருட்களை விநியோகித்து வருகின்றது.
சர்ச்சைக்குரிய இறைச்சி உற்பத்திகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதி உரிமம் ரத்து செய்யப்பட்ட ரொறென்றோ இறைச்சிக் கூடத்திலிருந்து விநியோகிக்கப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.