கனடாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதம ஆணையாளர் பிர்ஜூ டாட்டானி (Birju Dattani) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டாட்டானி (Birju Dattani) அண்மையில் பதவியில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் இஸ்ரேல் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக அவர் இவ்வாறு பதவி துறக்க நேரிட்டுள்ளது.
யூத சமூகம் தொடர்பிலும் இஸ்ரேல் தொடர்பிலும் ஆணையாளரின் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த குற்றச்சாட்டு குறித்து நீதி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
குறித்த நியமனம் தொடர்பில் கனடிய யூத அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
பாலஸ்தீன மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து இஸ்ரேலை, பிர்ஜூ (Birju Dattani) விமர்சனம் செய்திருந்தார்.
இவ்வாறு விமர்சனங்களை வெளியிட்ட ஒருவரினால் மனித மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதம ஆணையாளர் பதவியை வகிக்க முடியாது என விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து அவ்வாறு தனது பதவியை (Birju Dattani) ராஜினாமா செய்துள்ளார்.
பிர்ஜூவிற்கு (Birju Dattani) எதிராக சுமார் 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.