கனேடிய அரசியல்வாதி ஒருவர் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியதால், அவரது குடும்பத்தினர் கொந்தளித்துப்போயுள்ளார்கள்.
ஒன்ராறியோவின் கேம்ப்ரிட்ஜ் நகரைச் சேர்ந்த Farisa Navab (20), அபூர்வ நோய் ஒன்றின் காரணமாக செப்டம்பர் 11ஆம் திகதி இறந்துபோனார்.
இதற்கிடையில், Lanark-Frontenac-Kingstonக்கான மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான Randy Hillier, தனது சமூக ஊடக பக்கத்தில், Farisa முதலான 10 பேரின் புகைப்படங்களை பதிவிட்டு, அவர்கள் எல்லாரும் கொரோனா தடுப்பூசி பெற்றதைத்தொடர்ந்து எதிர்வினை ஏற்பட்டு இறந்துபோனதாக குறிப்பிட்டுள்ளார்.
உடல் நலமின்றி இறந்துபோன Farisaவின் புகைப்படத்தை பொறுப்பிலிருக்கும் ஒரு நபர் தவறாக பயன்படுத்தியதால் அவரது குடும்பத்தினர் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
அவரது சகோதரியான Ammarah Navab, இது முற்றிலும் பொய் என்றும், தன் சகோதரி மரபியல் நோய் ஒன்றின் காரணமாக இறந்துபோனதாகவும் தெரிவிக்கிறார்.
தங்கள் சகோதரியின் புகைப்படத்தை அனுமதியின்றியும், தவறான நோக்கிலும் பயன்படுத்திய Hillier மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும், அவர் அந்த புகைப்படம் முதலான போலித் தகவல்களை அகற்றவேண்டும் என்றும் கூறும் Ammarah, தங்கள் குடும்பத்துக்கு Hillier தீரா இழுக்கை ஏற்படுத்திவிட்டதாக கொந்தளிக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக Hillier நேரடியாக விளக்கம் அளிக்கவில்லை.
Ammarah மட்டுமின்றி, அந்த சமூக ஊடக இடுகையில் புகைப்படம் வெளியான மற்றவர்களின் குடும்பங்களும், அவர்களது மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.
Hillier, தடுப்பூசிக்கு எதிரான கொள்கை கொண்டவர் என்பதும், தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருபவரும் என்பது குறிப்பிடத்தக்கது.