Reading Time: < 1 minute

பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டுச் சபையுடன் நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலின் போதே பிரித்தானிய நிறுவனங்கள் இவ்வாறு தெரிவித்துள்ளதாக உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த வட்டமேசை கலந்துரையாடலின் போது இலங்கை மற்றும் பிரித்தானிய வர்த்தக சமூகத்திற்கிடையில் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும், குறிப்பாக கொழும்பு, துறைமுக நகரத்தில் செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.