Reading Time: < 1 minute

2023ஆம் ஆண்டில் மட்டும் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 210,352 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததாக இலங்கைசுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி1.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் என்ற 2023 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் இலக்கை விட 12,697 குறைவாக உள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 2023 இல் இலங்கைக்கு விஜயம் செய்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை விட 106.6 விகித அதிகரிப்பு என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு மாதத்திற்கு அதாவது கடந்த டிசம்பரில் அதிகபட்ச சுற்றுலாபயணிகள் வருகை தந்துள்ளதாகவும் இது டிசம்பர் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது128.7 விகிதம் அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.