Reading Time: < 1 minute
வாஸ்கோடகாமா என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) காலை கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது.
689 பயணிகள் மற்றும் 460 பணியாளர்களுடன் குறித்த கப்பல் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளது.
இது ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் இந்தியாவிலிருந்து கொழும்பு, காலி மற்றும் திருகோணமலைக்கு செல்லும் பயணிகளை சுமந்து வந்துள்ளது.
போர்ச்சுகல் கொடியுடன் வந்துள்ள இந்த பயணிகள் கப்பல் நாளை இரவு இந்தோனேஷியா நோக்கி புறப்படும்.