Reading Time: < 1 minute

இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த உயிர்களைக் கௌரவிக்கும் வகையில் தமிழ் நினைவுச்சின்னத்திற்கான வடிவமைப்புக்கு 3 ஆண்டு கால தாமதத்திற்குப் பின்னர் கனேடிய பிராம்டன் நகர சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தநிலையில் தமிழ் இனப்படுகொலை நினைவகம் 2025ஆம் ஆண்டுக்குள் சிங்குகூசி பூங்காவில் கட்டப்படும் என நகரம் தெரிவித்துள்ளது.

4.8-மீட்டர் உயரமுள்ள துருப்பிடிக்காத எஃகு நினைவுச்சின்னத்தின் இறுதி வடிவமைப்பாக உள்ளதுடன் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று தாயகத்தின் சுருக்கத்தை கொண்டுள்ளது.

சுற்றியுள்ள தூண்களில் பல தசாப்தங்களாக நடந்த உள்நாட்டுப் போர் பற்றிய விபரங்கள் அடங்கியுள்ளன.

தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கான இறுதி வடிவமைப்பிற்கு பிராம்ப்டன் நகர சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இனப்படுகொலை இது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நகரம் கட்டுவதாக உறுதியளித்த நினைவுச்சின்னமாகும்.

கடந்த 2021 ஜனவரியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்துத் தள்ளப்பட்ட பின்னர் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் தமது நகரத்தில் ஒரு நினைவுச்சின்னத்தை அமைப்பதாக உறுதியளித்திருந்தார்.

இதனை தமிழ் சமூகத்தில் பலர் இனப்படுகொலை என்று அழைக்கின்றனர்.