இலங்கையில் நிலவும் சீரற்ற பொருளாதார நிலைமை காரணமாக, அங்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் என கனடா, இல்ங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு கனடா எச்சரித்துள்ளது.
இலங்கையில் பொருளாதாரம் மோசமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக மருந்துகள், எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் கனடா எச்சரித்துள்ளது.
பல்பொருள் அங்காடிகள் எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகள் இருக்கலாம் என்பதுடன் மின்சாரம் துண்டிப்பு மேற்கொள்ளப்படலாம் . பொருளாதார ஸ்திரமின்மை சுகாதாரம் உட்பட பொது சேவைகளை வழங்குவதையும் இது பாதிக்கலாம்” என்றும் கனடா தனது பயண ஆலோசனையில் எச்சரித்துள்ளது.
மேலும் இலங்கைக்கு பயணிக்கும்போது உணவு, நீர் போன்றவற்றை கையில் வைத்திருக்குமாறும், போதியளவு மருந்துகளை கைவசம் வைத்திருக்குமாறும், உள்ளூர் ஊடகங்களை கண்காணிக்குமாறும் கனடா தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.