கனடாவில் அண்மையில் இராணுவ கல்லூரி மாணவர்கள் நான்கு பேரின் மரணங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஒன்றாரியோ கிங்ஸ்டனில் அமைந்துள்ள றோயல் இராணுவ கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் வாகன விபத்தில் அண்மையில் உயிரிழந்திருந்தனர்.
இந்த சம்பவத்தில் ஏதேனும் சந்தேகங்கள் காணப்படுகின்றதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும், இந்த விபத்துச் சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான எந்தவொரு விடயமும் கிடையாது என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுவரையில் நடைபெற்ற விசாரணைகளின் போது இந்த சம்பவத்தில் வெளிச்சக்திகளின் தலையீடோ அல்லது சதித் திட்டங்களோ இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என்றே தென்படுகின்றது என கனேடிய இராணுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறெனினும் பிரேதப் பரிசோதனைகள் குறித்த இறுதி அறிக்கைகள் கிடைக்கப் பெறும் வரையில் எந்தவொரு விடயத்தையும் உறுதிப்படுது;த முடியாது என அறிவித்துள்ளனர்.
இந்த மாணவர்கள் பயணம் செய்த வாகனம் நீரில் மூழ்கியிருந்த நிலையில் வாகனம் மீட்கப்பட்டதுடன், இராணுவ கல்லூரியின் நான்கு மாணவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.