Reading Time: < 1 minute
இந்த கோடையில் மருத்துவ மனித சோதனைகளுக்குப் பயன்படுத்தி இரண்டு கொவிட்-19 தடுப்பூசியைத் தயாரிக்கவுள்ளதாக, எட்மண்டனை தளமாகக் கொண்ட ஒரு ஆய்வகம் தெரிவித்துள்ளது.
விலங்கு மாதிரிகளில் பயன்படுத்தப்படும்போது சாத்தியமான தடுப்பூசிகள் ‘உண்மையில் சக்திவாய்ந்த ஆன்டிபாடி பதிலை’ காண்பிக்கும் என்று ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜோன் லூயிஸ் விளக்கினார்.
இதன் பொருள் தடுப்பூசி நோய்த்தொற்றை நடுநிலையாக்கியது மற்றும் SARS-CoV-2ஐ அங்கீகரித்து நீக்கிய டி-செல் பதிலைத் தூண்டியது. டி-செல் என்பது நோயெதிர்ப்பு மறுமொழியில் ஈடுபடும் ஒரு வகை வெள்ளை இரத்த அணு ஆகும்.
லூயிஸ் விபரித்த சவால் என்னவென்றால், கொரோனா வைரஸ்களின் பிறபொருளெதிரி (ஆன்டிபாடி) செயல்பாடு இரட்டை முனைகள் கொண்ட வாள். ஏனெனில் அவை சில நேரங்களில் தொற்றுநோயை அதிகரிக்கும் என்றும் கூறினார்.