Reading Time: < 1 minute
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் இந்தியாவுக்கு, ஒன்ராறியோ மாகாணம் (Ontario, Canada) 144 கோடி இந்திய ரூபா பெறுமதியான செயற்கை சுவாசக் கருவிகளை வழங்கவுள்ளது.
ஒன்ராறியோவின் பிராம்டன் நகரில் தயாரிக்கப்படும் 3 ஆயிரம் செயற்கை சுவாசக் கருவிகளை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக மாகாண முதல்வர் டக் போர்ட் (Doug Ford) தெரிவித்துள்ளார்.
இந்த செயற்கை சுவாசக் கருவிகள் ஒவ்வொன்றும் 8 ஆயிரம் கனேடிய டொலர் பெறுமதியானவை என்றும் இவற்றின் மொத்த மதிப்பு, சுமார் 144 கோடி இந்திய ரூபா என்றும் கூறப்பட்டுள்ளது.