Reading Time: < 1 minute
இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன (Kshenuka Dhireni Senewiratne) நியமிக்கப்பட்டுள்ளார்.
சேனுகா திரேனி செனவிரத்ன தனது நற்சான்றிதழை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் நேற்று (05.01.24) கையளித்துள்ளார்.
இது தொடர்பாக, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய ஜனாதிபதி , மிலிந்த மொரகொட முன்னதாக அந்தப் பதவியை வகித்தார் எனவும் அவர் தனது பதவி விலகியதனை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.
சேனுகா திரேனி செனவிரத்ன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதியாகவும் பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் தாய்லாந்து நாட்டுக்கான தூதுவராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.