Reading Time: < 1 minute

இந்தியாவில் இருந்து 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் வாழும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

அது தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில்,

“இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இருநாட்டு உறவு மோதல் முற்றியுள்ள நிலையில் இந்தியாவில் கனடாவுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம்
கனடாவுக்கு எதிராக எதிர்மறை உணர்வுப்பூர்வ கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. கனடா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம்.

ஒருவேளை கனடா நாட்டினர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம். எனவே டெல்லியில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து ஒதுங்கியிருக்கவும். தனிப்பட்ட தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

மும்பை, சண்டிகர், பெங்களூரு ஆகிய நகரங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏதாவது உதவி தேவைப்பட்டால் கனடா நாட்டினர் டெல்லியில் உள்ள தூதர அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

கனடா – இந்தியா உறவில் விரிசல்
மேலும் பிக்பாக்கெட், சிறிய காயம் போன்ற சம்பவங்கள் பொதுவானது. குற்றவாளிகள் வெளிநாட்டினரை இலக்காக வைத்து தாக்கலாம். குறிப்பாக முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் இதுபோன்று நடக்கலாம் என எச்சரித்துள்ளது.

காலிஸ்தான் செயல்பாட்டாளர் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் கனடா, இந்திய புலனாய்வு அமைப்பு மீது குற்றம் சுமத்தியதை அடுத்து கனடா – இந்தியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்[பிடத்தக்கது.