Reading Time: < 1 minute

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்த நிலையில் இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் புதுடெல்லியில் இன்று இடம்பெற்றது.

இதன்போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கூடிய விரைவில் கைச்சாத்திடப்படும் என ஜனாதிபதி ரணில் பங்களாதேஷ் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கைக்கும் பங்களாதேஷ்க்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இந்தக் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.