Reading Time: < 1 minute

கோடைகாலம் நெருங்கிவரும் நிலையில், பெரும்பாலான மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள். அத்தகைய நபர்களுக்கு உதவும் வகையில் பிரபல நிறுவனம் ஒன்று இந்த ஆண்டின் சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 23 நகரங்களில் கனேடிய நகரங்கள் இரண்டும் தெரிவாகியுள்ளது. மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ள குறித்த பட்டியலை பெண்கள் குழு ஒன்று தெரிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதில் கனடாவின் எட்மண்டன் மற்றும் விக்டோரியா நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியின் மையத்தில் ஒரு துடிப்பான நகர்ப்புறம் எட்மண்டன் நகரம் என குறிப்பிட்டுள்ள அந்த குழுவினர், கோடையில் 18 மணி நேரம் பகல் வெட்டம் இருக்கும் எனவும் குளிர்காலத்தில் பனிக்கட்டிகளால் செய்யப்பட்ட கோட்டைகள் கண்களுக்கு விருந்து எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பூர்வகுடி மக்கள் அதிகம் வாழும் பகுதி இது என குறிப்பிட்டுள்ளதுடன் எல்க் தீவு தேசிய பூங்காவையும் மறக்காமல் விஜயம் செய்யுங்கள் என பரிந்துரைத்துள்ளனர். விக்டோரியா நகரம் தொடர்பிலும் சிறப்பான கருத்தை பதிவு செய்துள்ளனர்.

மேலும், 23 நகரங்கள் பட்டியலில் ஸ்பெயின் நாட்டின் மல்லோர்கா முதலிடத்திலும், இத்தாலியின் சிசிலி இரண்டாவது இடத்திலும் ஸ்கொட்லாந்தின் Isle of Skye மூன்றாவது இடத்திலும், பிரான்ஸ் நாட்டின் நைஸ் நான்காவது இடத்திலும் சுவிட்சர்லாந்தின் Interlaken ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இதில் 9வது இடத்தில் ஜப்பானும் 10வது இடத்தில் இலங்கையும் தெரிவாகியுள்ளது.