Reading Time: < 1 minute

குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

குரங்கமை நோயை கட்டுப்படுத்துவதற்காக ஒரு மில்லியன் டாலர்கள் உதவியாக வழங்கப்பட உள்ளது.

நேரடியாக ஆப்பிரிக்காவிற்கு இந்த நிதி உதவி வழங்கப்படாது எனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக உதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை என்று அழைக்கப்படும் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நிதி உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கமை நோய் தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு உதவி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மெலனி ஜோலி நாளைய தினம் தென்னாபிரிக்காவிற்கான அதிகார பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

ஜோலி இரண்டு நாட்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கி இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு உறவுகள் குறித்து இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.