Reading Time: < 1 minute
ஆபத்தான குற்றவியல் சம்பவங்களை தடுக்க, வொஷிங்டன் மாநிலத்திற்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கும் இடையிலான எல்லையில் ஒரு கம்பிவடத் தடை நிறுவப்பட்டுள்ளது.
இதுகுறித்து செயல் தலைமை ரோந்து முகவர் டோனி ஹாலடே கூறுகையில், ‘இந்த பாதுகாப்பு கம்பிவடத் தடை அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள மக்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், இரு திசைகளிலும் சட்டவிரோத வாகன உள்ளீடுகளைத் தடுப்பதன் மூலம் எல்லையின் இந்த பகுதியைப் பாதுகாப்பதற்கும் இது உதவுகிறது’ என கூறினார்.
இரு நாடுகளிலும் தொற்றுநோய் ஏற்பட்ட மார்ச் மாதம் முதல் கனடா- அமெரிக்க எல்லை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் கட்டுப்பாடுகள் புதுப்பிக்கப்படுகின்றன.