டென்னிஸ் ஷாம்ஹால் அவசரமாக கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அவர் இன்றைய தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ரஷ்யா உடன் போர் புரிந்து வரும் உக்ரைனுக்கு கனடா பாரிய அளவில் உதவிகளை வழங்கி வருகின்றது.
இந்த நிலையில் மேலும் உதவிகளையும் நிவாரணங்களையும் கூறும் வகையில் உக்கிரன் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை இந்த விஜயத்தின் போது அவர் அரசாங்கத்திடம் அதிகாரப்பூர்வமாக கோருவார் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடந்த அண்மையில் நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலான்டினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் உக்கிரேனுக்கு 2.4 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த இவ்வாறான ஓர் பின்னணியில் உக்ரேன் பிரதமர் அவசரமாக கனடாவிற்கு விஜயம் செய்து மேலும் உதவிகளை கோர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா அரசாங்கம் தொடர்ச்சியாக உக்கேனுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது.
இதேவேளை உக்ரேனின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு பலவீனமான நிலையில் காணப்படுவதாகவும் ஆயுதங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அண்மையில கசிந்த அமெரிக்கா புலனாய்வு தகவல்களின் மூலம் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.