Reading Time: < 1 minute

அல்பர்ட்டாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் தொடரும் என டாக்டர் தீனா ஹின்ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 8ஆம் திகதி முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஜனவரி 21ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், கட்டுப்பாடுகள் தொடரும் என அவர் கூறினார்.

நீடிப்புக்கான காலவரிசையை பற்றி குறிப்பிடாத ஹின்ஷா, தற்போது இருக்கும் சுகாதார நடவடிக்கைகள் எதுவும் இந்த நேரத்தில் அகற்றப்படாது என தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘அந்த முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை. ஆனால், கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்குவது எப்போது பாதுகாப்பானது என்பதைத் தீர்மானிக்க, மாகாணமானது மருத்துவமனையில் சேருதல் மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவு எண்ணிக்கைகளைக் கவனித்து வருகிறது. அல்பர்ட்டா மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியே யாரையும் சந்திக்க முடியாது’ என கூறினார்.

அல்பர்ட்டா நாட்டில் தனிமனிதத் தொற்று வீதத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.