Reading Time: < 1 minute
கனடாவின் அல்பர்ட்டாவில் கடைகளில் மதுபானம் விற்பதற்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஒன்றாரியோ மாகாணத்தில் கடைகளில் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு கடைகள், மளிகை கடைகள் போன்றவற்றில் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுபான வகைகளை கடைகளில் விற்பனை செய்வது மூலம் வாடிக்கையாளர்களுக்கு நன்மை ஏற்பட்டாலும் மதுபான சில்லறை விற்பனையை நிறுவனங்கள் பெருமளவில் இதில் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே சிறு வியாபாரங்களை பாதுகாக்கும் நோக்கில் மளிகை கடைகளில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதனை தடை செய்வதாக அல்பர்ட்டா மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.