கனடாவின் அல்பர்ட்டா மாகாண மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாகாண மக்கள் முடிந்தளவு பொது வெளியில் உலவித் திரிவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவுகை காணப்படுவதனால், வளி பாரியளவில் மாசடைந்துள்ளது.
அல்பர்ட்டாவின் எட்மோன்டன் மற்றும் கல்கரி ஆகிய நகரங்களின் வளியின் தரம் மோசமாக காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளின் காற்றின் தரம் குறைவாக காணப்புடுவதனால் மக்கள் நோய்வாய்ப்படும் சாத்தியங்கள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், சுவாசப் பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் இவ்வாறு ஆபத்துக்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்மோன்டன் நகரம் புகைமண்டலமாக காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.