Reading Time: < 1 minute

கனடாவில் நடைபெற உள்ள பிரபல இசை நிகழ்ச்சி ஒன்றின் டிக்கெட்டுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றது.

உலகின் முதல் நிலை இசை கலைஞர்களில் ஒருவரான டெய்லர் ஷிப்டின் இசை நிகழ்ச்சி டிக்கெட்டுகள் இரண்டு இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மிகவும் அரிய வகையிலான நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கில் இவ்வாறு குறித்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகின்றது.

7 வயதான ஜக் என்ற சிறுவன் அறிய வகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மொத்த சனத் தொகையில் 0.01 வீதமான மக்களே இந்த நோயினால் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோய்க்காரணமாக குறித்த சிறுவன் கட்டம் கட்டமாக உடல் பாகங்கள் செயலிழக்க நேரிடும் என அவரது தாயார் தெரிவிக்கின்றார்.

அவரது முள்ளந்தண்டு மூளை நரம்புகள் என்பன செயலிழிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோய்க்கு பூரணமாக சிகிச்சை அளிக்கக்கூடிய சிகிச்சை முறைமைகள் எதுவும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய சிறுவனுக்கு உதவும் நோக்கில் பல்வேறு தரப்பினரும் நிதி திரட்டி வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக பிரபல பாடகி டெய்லர் ஷிப்டின் இசை நிகழ்ச்சிக்கான இரண்டு டிக்கெட்டுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆய்வுகளுக்காகவும் நிதி திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.