தொற்று நோய் நெருக்கடியால் மூடப்பட்டுள்ள அமெரிக்காவுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு பெரும்பாலான கனேடியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக நோனோஸ் ஆய்வு அமைப்பு நடத்திய புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கட்டாய பி.சி.ஆர். சோதனை, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் எல்லைகளைத் திறப்பது குறித்து மத்திய அரசு ஆராய்ந்துவரும் நிலையில் எல்லைகளை தொற்று நோய்க்கு முந்தைய நிலையில் இருந்ததை ஒத்த விதிகளுடன் திறப்பதற்கு பெரும்பாலான கனேடியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக நானோஸ் கருத்துக்கணிப்புகு முடிவு கூறுகிறது.
தொற்றுநோய் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கான காலக்கெடு என்னவாக இருக்க வேண்டும்? என கருத்துக் கணிப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தவர்களில் 63 வீதம் பேர் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் எனப் பதலளித்துள்ளனர்.
பதிலளித்தவர்களில் 21 வீதமானவர்கள் இது குறித்து கருத்து வெளியிடவில்லை.
28 வீதம் பேர் எல்லையை உடனடியாகத் திறக்கலாம். அதனால் சிக்கல் ஏற்படாது எனக் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் நோனோஸ் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.