பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அதிகாரிகள் கனடாவைச் சேர்ந்த 25 பேரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதானவர்களில் அதிகமானவர்கள் Montreal பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதியவர்களை ஏமாற்றி மோசடி செய்தமை (Grandparents Scam) தொடர்பாக கைது செய்துள்ளனர்.
இந்த மோசடியில் 21 மில்லியன் டொலருக்கும் மேல் களவாடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் மொன்றியல் (Montreal) அருகிலுள்ள பொயின்டெ கிளெரி என்ட் வாடிவில் டொரியா (Pointe-Claire & Vaudreuil-Dorion) பகுதிகளில் உள்ள கால்செண்டர்களில் இருந்து செயல்பட்டுள்ளனர்.
குடும்ப உறவினர்கள் போன்று நடித்து வயோதிபர்களை ஏமாற்றியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
உறவினர்கள் விபத்துக்களில் சிக்கியதாகவும் கைது செய்யப்பட்டதாகவும் கூறி அவர்களை காப்பாற்றுவதற்கு பணம் தேவை என்ற அடிப்படையில் பண மோசடி இடம்பெற்றுள்ளது.
இந்த மோசடி 2021 ஆண்டு முதல் 2024 ஆண்டு வரையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.