தன் சொந்த நாட்டில் கடத்தப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டதால், அமெரிக்கா பாதுகாப்பான நாடாக இருக்கும் என்று நம்பி அமெரிக்காவுக்குச் சென்ற பெண் ஒருவர், அங்கு பாலியல் துன்புறுத்தல் உட்பட பல பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்ததால், வேறொரு முடிவை எடுத்தார்.
பெரு நாட்டில் புத்தக விற்பனையாளராக இருந்தவர் சுலேமா (Zulema Diaz, 46) என்னும் பெண். தன் சொந்த நாட்டில் கடத்தப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, அடித்து உதைக்கப்பட்டதால், அமெரிக்கா பாதுகாப்பான நாடாக இருக்கும் என்று நம்பி அமெரிக்காவுக்குச் செல்ல முடிவு செய்தார் அவர்.
ஆனால், புத்தக விற்பனை வேலை கிடைக்காமல், பிழைப்புக்காக மருத்துவமனை ஒன்றில் துப்புறவுப் பணிதான் கிடைத்தது சுலேமாவுக்கு.
வீடில்லாமல் தெருவில் வாழும் நிலைக்கு ஆளான சுலேமா, பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளார்.
கிடைத்த நல்ல செய்தி
அப்போது, கனடாவுக்குள் நுழைவதற்கு வசதியாக நியூயார்க் நகரம் பேருந்து டிக்கெட்களை இலவசமாக கொடுப்பதாக ஒரு செய்தி சுலேமாவுக்குக் கிடைத்துள்ளது. ஆகவே, கனடாவுக்குச் செல்வது என முடிவு செய்துள்ளார் அவர்.
பேருந்தில் ஏறி கனேடிய எல்லைக்கருகே இருக்கும் Plattsburgh என்ற இடத்துக்கு வந்த சுலேமா, அங்கிருந்து டெக்சி ஒன்றைப் பிடித்து, புலம்பெயர்வோர் கனடாவுக்குள் நுழையும் பிரபலமான இடமான Roxham Road என்ற இடத்தை வந்தடைந்துள்ளார்.
தற்போது சுலேமா கனடாவுக்குள் நுழைந்து புகலிடம் கோரியுள்ளார். ஆனால், அவரைப்போலவே கனடாவுக்குள் நுழைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பெரும் தலைவலி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.