Reading Time: < 1 minute

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடிய ஏற்றுமதிகள் மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை கனடிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

கனடாவின் ஏற்றுமதிகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

பெரும்பாலும் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

இவ்வாறான ஒரு பின்னணியில் இந்த வரி விதிப்பு காரணமாக பாதிக்கப்படக்கூடிய தரப்புக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் முனைப்புகளில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்களுக்கு நிகரான அடிப்படையில் வர்த்தக நிறுவனங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து கனடிய அரசாங்கம் ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.