அமெரிக்காவுக்குள் 30 நாட்களுக்கு மேல் தங்கும் கனேடியர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு பதிவேட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க நாடுகளுக்கு உறவுகள் மோசமடையும் நிலையில், புதிய விதிமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன.
இந்த புதிய கட்டுப்பாடு ஏப்ரல் 11 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஏற்கனவே இருந்த சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும்.
முன்னதாக இந்த சட்டத்திலிருந்து கனேடியர்கள் விலக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய நடைமுறையினால் “ஸ்னோபேர்ட்ஸ்” (Snowbirds) என அழைக்கப்படும் சுமார் 900,000 கனேடியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக குளிர்காலங்களில் அமெரிக்காவின் வெப்பமான தெற்கு மாநிலங்களான புளோரிடா, டெக்சாஸ், மற்றும் தெற்கு கரொலினா ஆகிய இடங்களில் கனடியர்கள் தங்கியிருப்பார்கள் புதிய நடைமுறையினால் கனடியர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.