அமெரிக்காவை சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை கனடா நீக்கியுள்ளது.
இதன்படி, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், தங்கள் நாட்டு கடைகளில் பொருட்களை வாங்குவதற்கும், விடுமுறையைக் கழிக்கவும் வேறு காரணங்களுக்காகவும் வந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தனியான விண்ணப்பப் படிவத்தையும் கனடா அரசாங்கம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆனால், கனேடியர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தவில்லை. கனடா மற்றும் மெக்ஸிகோ எல்லையைத் திறப்பது தொடர்பாக ஒகஸ்ட் 21ஆம் திகதிக்குப் பிறகுதான் முடிவெடுக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்கா-கனடா இடையிலான எல்லைதான் உலகிலேயே நீளமான மற்றும் மக்கள் போக்குவரத்து அதிகமுள்ள தரைவழி எல்லைப் பகுதியாகும்.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அமெரிக்க- கனடா எல்லை கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது.