கனடாவின் மொனட்ரீயல் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் பெண்களின் உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் கனடாவின் தன்னாட்சி மீதான மோதல்களுக்கு எதிராக, மொன்ட்ரீயல் நகரில் ஆயிரக்கணக்கானோர் குழுமி எதிர்ப்பை வெளியிட்டனர்.
சனிக்கிழமை, மொன்ட்ரீயல் நகரின் அமெரிக்க தூதரக முன்பாக, போராட்டக்காரர்கள் “உங்களுக்கு வெட்கம் வேண்டும்!” என முழங்கினர்.
இது, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கியுபெக் மாகாணம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் ஒன்றாகும்.
பலர் சிவப்பு நிற ஆடை அணிந்தனர், இது இரத்தத்தையும், காதலையும் பிரதிபலிக்கும் என தெரிவித்திருந்தனர். போராட்டப் பலகைகளில் கனடிய மேபிள் இலைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
சிலர், “The Handmaid’s Tale” (அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள் குறித்த கதையை) நினைவூட்டும் ஆடைகளை அணிந்தனர். போராட்டக்காரர்கள் எட்டு நிமிடங்கள் மெளனமாக நின்று, எதிர்ப்பு தெரிவித்தனர்.
டொனால்ட் டிரம்ப், அவரது துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது ஆதரவாளராக உள்ள எலோன் மஸ்க் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார்.
“நீங்கள் அரசர்களல்ல. நாங்கள் அடிமைகள் அல்ல!” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.