Reading Time: < 1 minute

அனைத்துலக தமிழர் பேரவை (Federation of Global Tamils) என்ற அமைப்பு கனடாவில் அறிமுகமாகவுள்ளது. இதன் அறிமுக நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி கனடாவில் ‘1686 Ellesmere Rd. Toronto. ON MIH 2V5’ எனும் முகவரியில் ‘JC’s BanQuet Hall’ என்ற மண்டபத்தில் பிற்பகல் 3மணி முதல் 5 மணிவரை இடம்பெறவுள்ளது.

தமிழர்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் அபிலாஷைகளை மேம்படுத்தும் அதேவேளையில், உலகளாவிய ஈழத் தமிழ் சமூகத்தை மேம்படுத்துவதே இந்த அமைப்பின் இலக்கு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாசார பாரம்பரியம்
அத்துடன், ஒவ்வொரு தமிழனும் கண்ணியம், சமத்துவம் மற்றும் நீதியை அனுபவிக்கும் எதிர்காலத்திற்காக எங்கள் பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் பாடுபடுதலும் இதன் நோக்கு என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், புலம்பெயர் மற்றும் தாயகம் முழுவதும் ஒற்றுமையை ஊக்குவித்தல், உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழ் சமூகத்தை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல் கூட்டு முயற்சிகள் மூலம் நமது வளமான கலாசார பாரம்பரியத்தை பாதுகாத்தல், அதே நேரத்தில் சமூக மற்றும் கலாசார நலனை மேம்படுத்துதல் போன்ற செயற்பாடுகள் இதன் மூலமாக முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், சமூக, பொருளாதார அல்லது அரசியல் முறைகள் மூலம் அனைத்து வகையான பாகுபாடுகளையும் எதிர்த்துப் போராடுதல், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு அதிகாரம், சமத்துவம் மற்றும் நீதியை ஊக்குவிக்கும் எங்கள் கூட்டு பலத்தை மேம்படுத்தும் முயற்சிகளை ஒழுங்கமைத்து ஆதரித்தல் போன்ற பணிகளை இந்த அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்போவதாகவும் அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.