கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தொடந்து நீடிப்பதால், ஒன்ராறியோ அரசாங்கம் அனைத்து அவசர உத்தரவுகளையும் நீடித்துள்ளது.
ஐந்துக்கும் மேற்பட்டவர்களின் சமூக ஒன்று கூடுவதற்கான தடை உள்ளிட்ட அவசர உத்தரவுகள் ஜூன் 9ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளன.
இந்தநிலையில், ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களின் சமூக ஒன்றுகூடுவதைக் கட்டுப்படுத்தும் சட்டமும் அடங்களாக அனைத்து அவசர உத்தரவுகளையும் ஜூன் 19ஆம் திகதி வரை நீடிப்பதாக ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.
வாங்கிச் செல்லும் சேவைக்கு மட்டுமே மதுபானச்சாலைகள் மற்றும் உணவகங்கள் அனுமதிக்கப்படும். குழந்தைப் பராமரிப்பு மையங்கள் தற்போதைக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வார தொடக்கத்தில், மாகாணத்தில் சில வணிக நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.