கனடாவில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கேட்டல் திறனை இழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூடுதல் எண்ணிக்கையிலான கனடியர்கள் கேட்டல் திறன் குறைபாடுகளினால் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
30 வயதுக்கும் மேற்பட்ட நபர்கள் சீரான இடைவெளியில் காதுகளை பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் சுமார் 37 வீதமான வயது வந்தவர்களுக்கு செவிப்புலன்சார் குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
40 வயதை கடந்த கனடியர்களில் பலருக்கு கேட்டல் குறைபாடுகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் அவர்களுக்கு போதியளவு தெளிவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கேட்டல் திறனை இழப்பதானது சமூக ரீதியில் தனிமைப்படக் கூடிய சாத்தியத்தை உருவாக்கும் எனவும் நினைவாற்றல் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
50 வயதின் பின்னர் அடிக்கடி காதுகளை பரிசோதனை செய்வது அவசியமானது என தெரிவிக்கப்படுகின்றது.
உடற் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் கேட்டல் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.