Reading Time: < 1 minute

சொத்து வரி உயர்வுக்கு டொரோண்டோ நகர சபை ஒப்புதல் அளித்துள்ளது.

டொராண்டோ நகர சபை 2021 ஆம் ஆண்டிற்கான பெரும்பாலான சொத்துக்களில் 0.7% சொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அதிகரிப்பினால் சராசரி வீட்டு உரிமையாளர்கள் ஆண்டுக்கு $69 டாலர்கள் அதிகமாக செலுத்தவேண்டி இருக்கும்.

நகர கட்டிட நிதிக்கு பயன்படுத்தப்படும் வரியும் இதில் அடங்கும், இது ஏற்கனவே 1.5% ஆக நிர்ணயிக்கப்பட்டது. நகரத்தின் கட்டிட நிதி போக்குவரத்து மற்றும் வீட்டு மூலதன திட்டங்களை நடைமுறை படுத்தல் போன்றவற்றிக்கு முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த குறிப்பிட்ட நிதிக்கு மொத்தமாக ,$49,826,401 திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் டொரோண்டோ நகர சபை தெரிவித்துள்ளது.

இந்த புதிய சொத்து வரி நகரத்திற்கு, $ 4,621,345,185 டாலர்களை கொண்டுவரும் எனவும் இந்த இக்கட்டான சூழ்நிலை காரணமாக சொத்து வரி உயர்த்தப்பட வேண்டிய ஒரு தேவை Toronto நகர சபைக்கு இருந்ததாக டொரோண்டோ நகர பிதா John Tory மேலும் தெரிவித்தார்.