தமிழ்ச் சமூக மையம் ஒன்றை அமைக்கும் எமது முயற்சிகளுக்கு நீங்கள் வழங்கிவரும் ஆதரவுக்கு முதற்கண் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எமது செயற்பாடுகளின் இற்றைய விபரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
311 STAINES ROAD / ஸ்ரெயின்ஸ் வீதி முகவரியில் உள்ள நிலத்தை உத்தேச தமிழ்ச் சமூக மைய அமைவிடமாக ரொறன்ரோ மாநகர சபை அங்கீகரித்துள்ள செய்தியை தமிழ்ச் சமூக மைய வழிப்படுத்து குழு உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகின்றது. நிலக் குத்தகை ஒப்பந்தத்தைப் பூர்த்திசெய்வதில் வழிப்படுத்து குழுவுடன் ரொறன்ரோ மாநகர சபை இணைந்து செயற்படவுள்ளது. இது பற்றிய அறிக்கையை நீங்கள் இங்கு வாசிக்கலாம்.
நாம் இந்த நிலத்தை மிகக்குறைந்த (ஆண்டொன்றுக்கு ஒரு டொலர் உடன் இதற்கான வரியும் / $1 plus HST) எனும் குத்தகைக் கட்டணத்தில் பெற்றுகொள்வதற்காக ரொறன்ரோ நகரசபையுடனும், நகரசபை முதல்வரின் அலுவலகத்துடனும், நகரசபை உறுப்பினர் மக்கெல்வி அவர்களுடனும் மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய நகரசபை உறுப்பினர்களுடனும் ஒருவருட காலமாக நெருக்கமாகச் செயற்பட்டு வந்துள்ளோம்.
தமிழ் சமூக மையத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நகரசபை உறுப்பினர் ஜெனிஃபர் மெக்கெல்வி மற்றும் நகர முதல்வர் ஜான் டோரி நகர சபையில் பேசினர். நகர முதல்வர் ஜான் டோரியின் விடியோவை இங்கு, மற்றும் நகரசபை உறுப்பினர் ஜெனிஃபர் மெக்கெல்வியின் விடியோவை இங்கு பார்க்கலாம்.
சமூக நிலையம் ஒன்றை அமைப்பதற்காக ரொறன்ரோ மாநகரத்தால் கொள்வனவு செய்யப்பட்ட ஓர் உபரி ஆதனமே 311 STAINES ROAD / ஸ்ரெயின்ஸ் வீதி முகவரி கொண்ட காணி. இது வெற்று நிலமாக இவ்வளவு காலமும் இப்படி ஒரு சந்தர்ப்பதிற்காகக் காத்திருந்தது போலும். இந்த அமைவிடம் தமிழர்கள் செறிந்து வாழும் ரொறன்ரோ, மார்க்கம், டுறம் ஆகிய பகுதிகள் யாவற்றுக்கும் மையமாக அமைந்துள்ளமை குறிப்பித்தக்கது. இப்பகுதியில் சமூக நிலையங்கள், அத்தியாவசிய சமூக சேவைகள் ஆகியவற்றின் பரம்பல் மிகவும் குறைவாகவே உள்ளமையை ஒரு கணம் இப்பகுதியில் உள்ள இவற்றின் பரம்பலை மேலோட்டமாகப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம்.
தற்பொழுது போதியளவு வளப்பகிர்வுச் சேவைகள் மேற்கொள்ளப்படாத இக்குறிச்சியில் தமிழ்ச் சமூகத்தினர், மேற்படி நிலத்தின் பூர்வீக உரித்துக் குடிகளான ஹியூரன்-வென்ட் குடியினர் மற்றும் பல உள்ளூர்ச் சமூகத்தினர்கள் அனைவரும் தத்தம் பண்பாட்டுச் சேவைகளையும், மனித சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கான இடவசதியை ஏற்படுத்துவதற்கு அவர்கள் அனைவருடனும் நாம் ஒத்துழைக்க விழைகின்றோம்.நாம் இது சம்பந்தமான விடயங்களை உங்களுக்கு அவ்வப்போது அறியப்படுத்தி வரும் அதே வேளை எமது நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும், இற்றை வரையான காலப்பகுதியில் எமது செயற்பாடுகளான ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ்ச்சமுதாயத்தின் வாழ்விடப் பரம்பல் பற்றிய புள்ளிவிபர ஆய்வுடன் கூடிய வரைபடம், இணைய வழியில் மக்களிடம் நாம் நடாத்திய கருத்துக்கணிப்புகள், ஸ்காபரோவில் சமுதாய மையம் அமைவதற்கான தேவைகள் போன்ற விபரங்களை அறிந்துகொள்ளவும் www.tamilcentre.ca என்னும் எமது இணையத்தளத்தை நாடுங்கள்.
City of Toronto approves location for Tamil Community Centre
The Steering Committee for the Tamil Community Centre project is excited to announce that Toronto City Council has approved 311 Staines Road as the future location of the Tamil Community Centre! The City of Toronto will work with the Steering Committee on finalizing a land lease. You can read the report here.
For the past year, the Steering Committee has been working closely with the City, the Mayor’s Office, Councillor McKelvie, and other elected officials in the area to secure this piece of land for this project at minimal cost – $1 plus HST.
Mayor Tory and Councillor McKelvie both spoke about the importance of the Tamil Community Centre at City Council. You can watch Mayor Tory’s video here and Councillor McKelvie’s video here.
311 Staines Road is a surplus property that was purchased by the City of Toronto for the construction of a community centre. However, it has sat vacant for an opportunity like this one. The land is at the centre of where the Tamil community lives in the City of Toronto, the City of Markham, and the Region of Durham. A quick glance at community centres and social services in this area reveal a marked lack of vital services.
We look forward to working with the Tamil community, the Huron-Wendat who are the ancestral rights holders of the territory, and the diverse local communities to create a space where they can all access cultural and human services in this underserved area.
The Committee will keep the community up to date on the process. In the meantime, please visit www.tamilcentre.ca to find the latest information on the project including results from the online consultation survey tool, and statistics and maps about the Tamil community in the GTA and the need for a community centre in Scarborough.