தியடோர் அன்ரனி (Theodore Antony)அவர்கள் யாழ் மண்ணை பிறப்பிடமாக கொண்டு 1970 களின் நடுப்பகுதியில் உயிரியல் ஆய்வில் பட்ட படிப்பை இங்கிலாந்தில் மேற்கொண்டு 15 வருடகாலம் அங்கு வாழ்ந்த இவர். அமெரிக்காவில் வணிக மேலாண்மை பட்ட படிப்பை முடித்துக் கொண்டு கனடாவிற்க்கு 1989 ல் குடி பெயர்ந்தார்.
கனடிய மண்ணில் புலமைப்பரிசில் திட்ட முகாமையாளராகி பல்லின மக்களை உள்ளடக்கிய முகவர் நிறுவனத்தை வெற்றிகரமாக நடாத்தியவர் திரு தியடோர் அன்ரனி அவர்கள்.
பாராளுமன்ற நடைமுறைகளிலும் அரசியல் செயற்பாடுகளிலும் பட்டறிவு கொண்ட இவர் தமிழினத்தின்அரசியல் அபிலாசைகளை நோக்கி, கனேடிய அரசியல் பிரமுகர்கள், கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியது மட்டுமன்றி சர்வதேச மட்டத்தில் மனித உரிமை வாதிகள், மனித உரிமை சட்ட தரணிகளுடன் நிறையவே தொடர்பு கொண்டு உழைத்தவர்களில் ஒருவர்.
கனேடிய தமிழ் காங்கிரசின் ஆரம்பகால வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்ட இவர் தமிழ் மக்களின் வளர்ச்சியை முன்னிறுத்தி பல ஊடகங்களில், தமிழ் மக்களுக்கு தேவையான தகவல் களங்களை திறந்து வைத்தவர்.
மேடைகளிலும் வானொலியிலும் பேசும் போது, பேச்சில் வேற்று மொழி கலக்காமல் பேச தொடர்ந்து பயிற்சி எடுப்பவரும் தனது கையொப்பத்தை தமிழிலே இட்டு மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்கப்படுத்துபவரும் கூட.
தமிழர்கள் கனேடிய தேர்தல்களில் வாக்களிக்கும் அளவு குறைவு என்ற குற்றச்சாட்டை துடைப்பதற்கு “வாக்களி தமிழா” என்ற செயற்திட்டத்தை உருவாக்கி நம்மவரிடையேயான கனேடிய அரசியலில் தமிழினத்தை பலம் கொண்ட இனமாக மாற்றுவதில் வெற்றி கண்டவர். பின்னர் தமிழர் ஒரு கட்சிக்கு விசுவாசமாக இருப்பதனால் வரக்கூடிய பாதகங்களை உணர்ந்து தமிழரை அனைத்து கட்சிகளை நோக்கி பரவலாக்கி அனைத்து கட்சிகளுடனும் நட்பை பேணும் மக்களாக மாற்றியதில் குறிப்பான பங்கு இவருக்குரியது.
சிறிலங்காவில் தமிழினத்திற்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என உறுதியாக நம்பும் இவர் தமிழருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அனைத்து கனேடியர்களுக்கும் நேர்மையாக சேவையாற்றுவதை குறிக்கோளாக கொண்டு தேர்தல் களத்தில் நிற்கிறார்.
நண்பர்களே, இது தேர்தலுக்கு முந்திய இறுதி வாரமாகும்.
சில மணி நேரம் தொண்டர்களாக பணியாற்றுவதன் ஊடாகவும் இந்த தொகுதியில் வசிக்கும் உங்கள் நண்பர்கள் உறவினரை தொடர்பு கொண்டு அவர்களை வாக்களிக்க ஊக்கப் படுத்துதல் ஊடாகவும் இவரின் வெற்றிக்கு நீங்கள் உதவ முடியும்.
தியடோர் அன்ரனி பணிமனை தொடர்பிலக்கம்
416-897-4282
நன்றி.