தீபா சுந்தரலிங்கம் (37) என்னும் பிரபல புற்றுநோய் பெண் வைத்தியர் டொரன்டோவில் புற்றுநோய் சிகிட்சைக்காக தன்னிடம் வந்த நோயாளியுடன் பல தடவைகள் கடமை நேரத்தில் நோயாளியுடன் பாலியல் தொடர்பிலான நடத்தை காரணமாக தனது வைத்திய உரிமத்தை இழக்கிறார்.
நோயாளியுடன் வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்டமை, அவரிடம் பாலியலில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களால் இவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் தீபா சுந்தரலிங்கம் (37) தனது வீட்டிலும், அவரது மருத்துவமனையிலும், அவரது மருத்துவமனையில் படுக்கையிலும், அவருடன் பாலியல் உறவு வைத்து, பாலியல் உறவு கொண்டவராக இருந்தார் என்ற குற்றசாட்டை டாக்டர் தீபா சுந்தரலிங்கம் ஒத்துக்கொண்டதை தொடர்ந்தே இந்த வைத்திய உரிமத்தை தடை செய்துள்ளனர். இவர் இனிமேல் கனடாவில் வைத்திய தொழிலில் ஈடுபடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
நோயாளியுடன் சிறிது கால உறவின் பின்னர் தான் வேறொருவரை காதலிப்பதாக சொல்லி நோயாளியுடன் தனது உறவை துண்டித்துக்கொண்டார் தீபா.
இதை தொடர்ந்தே நோயாளியினால் இந்த விடயம் மேலிட விசாரணைக்கு கொண்டுசெல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“நான் உடல் ரீதியாக உணர்ச்சிவசப்பட்டு உணர்ச்சிப்பூர்வமாக பாதிக்கப்பட்டுள்ளேன் மற்றும் ஒரு முக்கியமான உறவு இழப்பு என்னை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியது” என்னை விட்டு விலக்கியதுடன் எனக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும் மறுத்துவிட்டார்; என அந்த நோயாளி நேற்று புதன்கிழமை CPSO வில் (College of Physicians and Surgeons) தனது பாதிக்கப்பட்ட தாக்கத்தை அறிக்கையில் விளக்கினார்.
2015 ஜனவரி முதல் 2016 மார்ச் வரை 23 தடவை தீபா குறித்த நோயாளிக்கு சிகிச்சையளித்தார். குறித்த சம்பவங்கள் அனைத்தும் இந்த காலப்பகுதிக்குள்ளேயே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபா சுந்தரலிங்கம் அவர்கள் 2010 ஆண்டு முதல் மருத்துவ தொழிலில் உள்ளார் என்றும் ஸ்காபோரோ Rouge Valley Centenary Health Centre, இல் பணியாற்றினார் என்றும் மருத்துவ பொது தகவல் தளம் தெரிவிக்கின்றது.
மேலும் விவரங்கள்: https://www.cpso.on.ca/DoctorDetails/Theepa-Sundaralingam/0252171-89581
37 வயதான தமிழ் பின்னணியைக் கொண்ட பெண் புற்றுநோய் மருத்துவர் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டில் பணியை இழந்தது வைத்திய உலகிலும், தமிழ் கூறும் நல்லுலகிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.