நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை அமைச்சினால் கனடா- ரொறன்ரோவில் பேர்ச்மவுண் (Birchmount stadium) விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி 4வது வருட தடகள விளையாட்டுப் போட்டி காலை 9 30 மணிக்கு தேசியக் கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது.

கனடாத் தேசியக் கொடியினை திரு. K. சாந்திகுமார் அவர்கள் (கனடிய தேசிய அணியின் துடுப்பந்தாட்ட வீரர்) ஏற்றிவைக்க, அதனை தொடர்ந்து, தமிழீழ தேசியக் கொடியினை லெப்டினன்ட் புலவர் அவர்களின் சகோதரி நிவேதிதா ஆதிசிவன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

இன் நிகழ்வில் முன்னாள் ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினர் திரு.நீதன் சாண் அவர்களும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப்போட்டி பல செயற்பாட்டாளர்கள். ஆர்வலர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன், திரு. ஶ்ரீரங்கநாதன் பாலரஞ்சன் அவர்களின் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.


