TGTE இன் தலைமை தேர்தல் ஆணையாளரின் நான்காவது பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு!
நான்காவது பாராளுமன்ற தேர்தல் பற்றிய விவரங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (நா.க.த.அ) தலைமை தேர்தல் ஆணையாளர் திரு. ரஞ்சன் மனோரஞ்சன் அறிவித்துள்ளார்.
நான்காவது பாராளுமன்றத்தேர்தல் மூலம் 12 நாடுகளில் இருந்து 115 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
நா.க.த.அ அதன் முதல் தேர்தலை மே 2010 இல் நடத்தியது, அதன் முதல் பாராளுமன்றம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முதலாம் ஆண்டு நினைவு நாளான மே 18, 2010 அன்று அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தில் உள்ள சுதந்திர மண்டபத்தில் (The Independence Hall) கூடியது.
ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, நா.க.த.அ பன்னிரண்டு நாடுகளில் தேர்தலை நடத்தி பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து வருகின்றது.
நா.க.த.அ இன் பாராளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின் அடிப்படையில், அரசியலமைப்பின் 1.10.2 பகுதியில் குறிப்பிட்டவாறு பிரதமர் திரு.விசுவநாதன் ருத்ரகுமாரன், பின்வருவோரை தேர்தல் ஆணையகத்தின் அங்கத்தவர்களாக நியமித்துள்ளார்.
திரு. ரஞ்சன் மனோரஞ்சன் [CPA, USA][தலைவர்]
திருமதி அனோஜா முத்துசாமி [வழக்கறிஞர், இங்கிலாந்து]
திரு. ரமேஷ் பாலகிருஷ்ணர் [பத்திரிகையாளர், ஆஸ்திரேலியா]
இந்த மூன்று தேர்தல் ஆணையர்களும் கூட்டாக தேர்தலை நிர்வகிப்பார்கள்.
தேர்தல் ஆணையகம் பின்வரும் நபர்களை நாடுவாரியாக நியமித்துள்ளது.
இத்தேர்தல் ஆணையர்கள் ஒவ்வொருவரும் அந்தந்த நாட்டின் தேர்தலைக் கண்காணிப்பார்கள்.
கனடா – திரு. சிவநேசன் சின்னையா (ஆசிரியர் & ஊடகவியலாளர்)
டென்மார்க் – திரு. கருணாஹரன் (ஆசிரியர்)
பிரான்ஸ் (மற்றும் இத்தாலி, நோர்வே, சுவீடன், பின்லாந்து) – திரு.குமாரசாமி பரராசா (செயல்பாட்டாளர்)
சுவிட்சர்லாந்து மற்றும் பெனலக்ஸ் நாடுகள் – திரு. செல்லையா குலசேகரம் (செயல்பாட்டாளர்)
ஜெர்மனி – திரு.ரா. பாஸ்கரன் (செயல்பாட்டாளர்)
ஐக்கிய இராச்சியம் – திரு. சிதம்பரப்பிள்ளை (வழக்கறிஞர்)
அமெரிக்கா – திரு. ரஞ்சன் மனோரஞ்சன் (CPA)
வேட்புமனு தாக்கல் மார்ச் 10ஆம் திகதி தொடங்கும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
இறுதித் தேதி அந்தந்த நாட்டின் ஆணையர்கள் ஒவ்வொருவராலும் அறிவிக்கப்படும்.
நான்காவது நாடாளுமன்றத் தேர்தல் மே 5, 2024 அன்று நடைபெறும்.
தொடர்பு: திரு. ரமேஷ் பாலகிருஷ்ணர் [தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர்] [email protected]
TGTE’s Chief Election Commission Announces Details for Fourth Parliamentary Election
Mr. Ranjan Manoranjan, the Chief Election Commission of the Transnational Government of Tamil Eelam (TGTE), has announced the details about the upcoming election for the TGTE’s fourth Parliament, which will be comprised of 115 members from 12 countries.
The TGTE held its first election on May 2010, and its first Parliament convened on May 18, 2010, the first anniversary of the Mullivaikal Genocide, at Independence Hall in Philadelphia, PA, USA.
Every five years, the TGTE holds elections in twelve countries to elect parliamentarians from among its membership.
Mr. Visuvanathan Rudrakumaran, TGTE’s Prime Minister, pursuant to Article 1.10.2 of the TGTE Constitution appointed the following individuals as
Countrywide Election Commissioners based on the recommendation of the members of the TGTE Parliament.
Mr. Ranjan Manoranjan [CPA, USA][Chairperson]
Ms. Anoja Muthusamy [Solicitor, UK]
Mr. Ramesh Balakrishnar [Journalist, Australia]
These three Election Commissioners will jointly manage the elections.
The Election Commission has appointed the following individuals as Countrywide
Election Commissioners, each of whom oversees the parliamentary election in their respective country:
Canada – Mr. Sivanesan Sinniah, (Teacher & Journalist)
Denmark – Mr. Karunaharan (Teacher)
France (and Italy, Norway, Swedeen, Finland) – Mr.Kumarasamy Pararasa (Tamil Activist)
Switzerland and Benelux countries – Mr. Sellaiah Kulasekaram (Tamil Activist)
Germany – Mr. Ra. Baskaran (Tamil Activist)
United Kingdom – Mr. Sidambarapillai (Solicitor)
United States of America – Mr. Ranjan Manoranjan (CPA)
The Election Commission has announced that nominations will start on March 10, 2024. The closing date for nominations in each country will be announced by each Country’s Election Commissioner. The Election Commission has also announced that the fourth parliamentary elections will take place on May 5, 2024.
The fourth Parliament of the TGTE will convene on May 17 – May 19, 2024, in the USA.
Contact Information:
Mr. Ramesh Balakrishnar [Spokesperson for the Election Commission]: [email protected]
நா.க.த.அ இன் நான்காவது பாராளுமன்றம் மே 17 – மே 19, 2024 இல் அமெரிக்காவில் கூடும்.