ஆர்மேனிய இனவழிப்பை அங்கீகரித்த அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தினை பாராட்டுவதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழர்களாகிய நாம் ஆர்மேனியர்களுடன் தோழமை கொண்டு நிற்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
1915ம் ஆண்டு இளவேனிற்காலம் தொடங்கி 1916 இலையுதிர் காலம் வரையிலும் ஆர்மேனியர்கள் மீது படுகொலைகள், புலப்பெயர்ச்சி, பட்டினி, மோசமான நடத்துமுறை ஆகிய வழிகளில் 1.5 மில்லியன் ஆர்மேனியர்கள் மூர்க்கமான விதத்தில் நேரடியாகவே அழித்தொழிக்கப்பட்டார்கள்.
மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்க அரசு ஆர்மேனிய இனவழிப்பை அங்கீகரித்திருப்பது எப்போதோ நடந்திருக்க வேண்டிய ஒன்று. இந்த அங்கீகாரத்திற்கு பெரிதும் காரணம் புலம்பெயர் ஆர்மேனியர்களது அயராச் செயல்முனைப்புதான். புவிசார் அரசியல் பின்விளைவுகள் பாதகமாக இருந்த போதிலும் அதிபர் பைடன் அரசினர் தமது வெளியுறவுக் கொள்கையில், மனித உரிமைகளை மையப்படுத்தியுள்ள அறத் துணிவை நாம் பாராட்டுகிறோம்.
முதலாம் உலகப் போரில் ஆர்மேனியர்கள் ரஷ்யாவின் பக்கம் சேர்ந்து கொள்ளக் கூடும் என்று ஓட்டமன் பேரரசு கற்பித்த ‘நியாயம்’ ஆர்மேனியரகளைத் துடைத்தொழிக்கும் குறிப்பான கொடுநோக்கைத் தணித்து விடவில்லை. ஓட்டமன் துருக்கியர் தாம் நிகழ்த்திய மனிதத் தன்மையற்ற படுகொலையை ஆர்மேனியப் பிரிவினைக் கொள்கையை எதிர்க்கத் ‘தேவையான நடவடிக்கை’ என்று நியாயப்படுத்தியமை இனவழிப்புக் குற்றத்தின் கொடுமையையும் காட்டுவிலங்காண்டித் தனத்தையும் குறைத்து விடாது.
இனவழிப்பை அங்கீகரிப்பதன் முதன்மையான நோக்கம் தீமை செய்தவர் மீது பழி சுமத்தி விட்டுப் போவது மட்டுமே அல்ல, உலகில் எங்கும் அது நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதும்தான். அது செயல்துடிப்பான முன்னகர்வு ஆகும். இனவழிப்புக்கு இரையாகி மடிந்தோரின் உயிர்களை மறவாமலிருப்பது அச்செயல் மீண்டும் என்றேனும் நிகழ்ந்து விடாமல் தடுத்திட மீளுறுதி கொள்வதாகும் என்று அதிபர் பைடன் கூறியுள்ளார்.
நாம் இதைச் செய்வது… எது நடந்ததோ அது மீண்டும் ஒருபோதும் நடவாதிருப்பதை உறுதி செய்வதற்காகவே. தவிர பழி சுமத்துவதற்காக அல்ல,’ ஓம், இனவழிப்பு ஒப்பந்தத்தின் தலைப்பே காட்டுவது போல், ஒப்பந்தம் இவ்வடிவில் வரையப்பட்டதன் நோக்கம் இனவழிப்புக் குற்றத்தைத் தண்டிப்பது மட்டுமன்று, அக்குற்றம் புரிவதைத் தடுப்பதுமாகும். இனவழிப்பு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டுள்ள அரசுத் தரப்புகளுக்கு இனவழிப்பைத் தடுக்கும் கடமை போர்காலத்திலும், சமாதான காலத்திலு; உள்ளது என்று ஒப்பந்தத்தின் முதல் உறுப்பு சொல்கிறது. போஸ்னிய இனவழிப்பு வழக்கில் பன்னாட்டு நீதிமன்றம் (IC j) இந்த சட்டக் கடப்பாட்டை உறுதிசெய்தது என அதிபர் பைடன் அறுதியிட்டுரைக்கின்றார்.
இனவழிப்பு இல்லாத உலகம் செய்ய நாம் சேர்ந்து முயற்சி செய்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
TGTE Celebrates US Recognition of the Armenian Genocide in 1915-16
TGTE congratulates the Biden Administration for recognizing the Armenian Genocide which took place from Spring 1915 to Autumn 1916. Approximately 1.5 million Armenians were physically annihilated through massacres, starvation, ill treatment and displacement. We, the Eelam Tamils stand in solidarity with the Armenians in their search for justice. The recognition of the Armenian genocide by the U.S. government is long overdue. The recognition is thanks to the resilient activism of the Armenian diaspora in the United States. We applaud the Biden Administration’s moral courage to put human rights at the center of their foreign policy even when there are adverse geopolitical consequences.
The Ottoman Empire’s “rationale” that Armenians might side with Russia during the First World War does not vitiate the specific intent to wipe out the Armenians. The Ottoman Turk’s “justification” that their barbaric massacre was a “necessary measure” against Armenian separatism does not mitigate the cruelty and the barbarism of the crime of genocide.
The primary purpose of the recognition of genocide is not to simply pass blame on evil actions, but to serve as a proactive measure. As President Biden noted, the remembering of the lives of the victims of genocide is to recommit ourselves to preventing such an atrocity from occurring ever again. The President emphasized that, “We do this not to cast blame but to ensure that what happened is never repeated”. Article 1 of the Genocide Convention mandates that State Parties have a duty to prevent genocide in time of peace or in time of war. The International Court of Justice (ICJ) in the Bosnian genocide case affirmed this legal obligation.
Let’s try together to create a genocide-free world.