தேவையானவை :
கோழி- 1
இஞ்சி பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி
தயிர்- 2 கப்
தந்தூரி பவுடர்- 1 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள்- அரை தேக்கரண்டி
உப்பு – சிறிது
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
எலுமிச்சை – சிறிது
செய்முறை :
1 .கோழியை சுத்தம் செய்து எட்டு முதல் பத்து துண்டுகளாக்கவும்.
2. தயிரில் இஞ்சி பூண்டு மற்றும் அனைத்து தேவையான பொருட்களையும் போட்டு நன்கு கலக்கவும்.
3. பிறகு கலக்கி வைத்துள்ள தயிரில் கோழித் துண்டுகளைப் போட்டு எலுமிச்சையை பிழிந்து விட்டு குறைந்தது ஒரு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஃபிரிட்ஜில் ஊறவைக்கவும்.
4. பின்பு அவெனில் கிரில் செய்யும் தட்டில் கோழித்துண்டுகளை அடுக்கி அதிகப் பட்ச சூட்டில் வைத்து அரை மணி நேரம் வேகவைக்கவும் .
5. பின்பு துண்டுகளை திருப்பிவிட்டு மீதமுள்ள கோழி ஊறிய தயிர் கலவையை அதன் மீது தடவி அனலைக் பாதியாக குறைத்து மீண்டும் அரை மணி நேரம் கிரில் செய்யவும்.
6. கோழி நன்கு வெந்த பிறகு வெளியில் எடுத்து நறுக்கி வெங்காயம் தக்காளி எலுமிச்சை துண்டுகளோடு பரிமாறவும்.