கனடாவில் கனடிய தமிழரின் குரல் என தம்மை சொல்லிக்கொள்ளும் ஒரு அமைப்பு, தமிழ் சமூக ஆர்வலரான ஒரு வீடு விற்பனை முகவர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

2001ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் கனடிய அரசியல் செயல்பாடுகளுக்கென வன்னி தலைமையால் உருவாக்கப்பட்ட அமைப்பே இன்று வழிமாறி, திசைமாறி தான் போனபோக்கில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
இந்த அமைப்பு சில வருடங்களிற்கு முன்னர் இலங்கை அரசு சார்ந்த ஒருவருக்கு எதிரான வழக்கில் (CTC அமைப்பிற்கும் புலிகளிற்கு தொடர்புகள் உள்ளதென கூறியமை பொய்) வெற்றி கண்டதாக செய்திகள் தெரிவிக்கபட்ட போதிலும் கனடிய தமிழ் மக்கள் உண்மைக்கு எதிராக மௌனம் காத்தார்கள் அன்று; ஆனால் இன்றைய நிலை இவ்வமைப்பு திசைமாறி செல்லும்போது இனியும் மௌனம் காப்பார்களா?

இவர்களே (CTC) கடந்த ஆண்டு இலங்கை அரசின் ஊதுகுழலாக தமிழ் இன அழைப்பை நியாயப்படுத்திய இலங்கை அரசின் தொலைக்காட்சி ரூபவாஹினியை தமது பொங்கல் நிகழ்வுக்கு கொண்டுவர எடுத்த முயட்சி, தமிழர்களின் பலமான எதிர்ப்பினால் இறுதி நிமிடத்தில் கைவிடப்பட்டது.
அதேசமயம் இவ்வமைப்பின் சில சமூகத்துக்கு ஒவ்வாத விஷயங்கள் பலவழிகளிலும் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அவ்வமைப்பின் அங்கம் வகிக்கும் ஒருசில தனிநபர்களின் முடிவிலேயே அவ்வமைப்பு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.
கேள்வி கேட்பவர்களுக்கு இது அங்கத்துவ அமைப்பென்றும் (members organisation) தாம் அங்கத்துவர் தவிர்ந்த யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் தட்டிக்கழிக்கும் இவர்கள், புதிதாக அங்கத்துவம் கேட்ட தமிழர்களையும் இலகுவாக அங்கத்தவர்களாக இணைந்ததாக தெரியவில்லை. ஆனால் பொது கனடிய அரசியல் வெளியில் தம்மை தமிழரின் குரல் என காட்டி, அரசுகளிடம் இருந்து மானியன்களையும் பெற்றுவந்துள்ளனர்.
இவ்வமைப்பின் சில செயல்பாடுகள் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த தமிழ் சமூக ஆர்வலரான ஒரு வீடு விற்பனை முகவர் மீது இந்த அமைப்பினால் மான நஷ்ட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டு புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பினால் கனேடிய தமிழர் பேரவை (CTC) தாக்கல்செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின்றது.
அத்துடன் இந்த அமைப்பினால் 2009ம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் ஈழத்தில் மக்கள் வாழ்வாதாரத்துக்கு என சேகரிக்கப்பட்ட பலலட்சம் நிதி பலவருடமாக அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சேரவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் ஆதாரத்துடன் எழுப்பப்பட்டு வருகின்றன.
இவ்வமைப்பில் உள்ளவர்கள், இலங்கை சென்று அங்கு சிங்கள இனவாதிகளுடன் சமரசம் செய்வதும், கூடி கூழாவுவது மட்டுமின்றி ஒரு பொது மக்கள் சேவைக்கும், தமிழ் ஈழ நாட்டின் தேவைக்கும் என ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு, கேள்விகேட்பவர்களுக்கே வழக்கு போட்டு பயமுறுத்தி மௌனிக்க வைக்க முயல்கின்றது எனில், இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கமும் தற்போதைய அதன் நிலைப்பாடும் மக்கள் மத்தியில் உடனடியாக தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டிய தேவை இந்த அமைப்புக்கு உண்டு.
சம்பந்தப்பட்டவர்கள், மற்றும் இந்த அமைப்பில் (CTC) அங்கத்துவர்களாக உள்ளவர்கள் இதில் உடனடி பதில் கூறவேண்டிய தேவை உள்ளது.
அல்லது, கூட்டமாக சேர்ந்து தமிழுக்கும், ஈழத்துக்கும், யாரால் இது என்ன தேவைக்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அவர்களின் தியாகத்துக்கும் எதிராக ஒரு கூட்டமாக செயல்படுகின்றீர்கள் என்பதை காலம் சொல்லும்.
இவ் வழக்கின் மேலதிக விபரங்களும் அதில் சம்பந்தபட்டவர்களும் மற்றும் பொய் சாட்சியம் கூறியவர்களின் விபரங்களும் மிக விரைவில் செய்தியாக தொடரும் ….