கனடா பாராளுமன்ற உறுப்பினரும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜக்மீத் சிங், பிரதமர் ட்ரூடோ இந்தியா விவசாயிகளுக்கு எதிராக நடத்தும் வன்முறையை உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என காலிஸ்தான் சார்பு மற்றும் பாகிஸ்தான் சார்பு கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஜக்மீத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
தனது ட்விட்டரில் ஒரு வீடியோ செய்தியைப் பகிர்ந்த ஜக்மீத் சிங், நடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தை வரலாற்றில் மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டு, இந்த அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் வன்முறை பதிலைக் கண்டிக்க உலகத் தலைவர்களை அழைத்தார்.
முன்னர் பலமுறை கனடாவில் காலிஸ்தான் சார்பு போராட்டங்களையும் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்தவர் ஜக்மீத் சிங்.
2013’ஆம் ஆண்டில், அவர் ஒன்டாரியோவில் காலிஸ்தான் சார்பு ஆர்வலர்களின் மாநாட்டை ஏற்பாடு செய்தார். 2015’இல், புதிய ஜனநாயக கட்சியின் எம்பியாக ஜக்மீத் சிங் சான்-பிரான்சிஸ்கோவில் நடந்த காலிஸ்தான் சார்பு பேரணியில் பேசினார்.
அந்த பேரணியின் போது, ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரில் கொல்லப்பட்ட தலைவர் ஜர்னைல் சிங் பிந்த்ரான்வாலேவை அவர் புகழ்ந்து தள்ளினார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் இந்திய அரசுக்கு எதிராக பேசி, புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.