Reading Time: < 1 minute
தேவையானவை :
காய்கறிகள் – இரண்டு கப் (தேவைப்பட்டால் )
இறால் – ஒரு கப்
வெங்காயம் – 1
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – அரை டேபிள் ஸ்பூன்
கார்ன் ஃபிளார் – அரை டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
- இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும் . வெங்காயம் காய்கறிகளை வெட்டித் தேவையான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.
- வேக வைத்த காய்கறிகளை வடிகட்டித் தண்ணீரைத் தனியாக வையுங்கள். வடிகட்டிய தண்ணிர்ருடன் சோயா சாஸ், சில்லிசாஸ், வெள்ளை மிளகுத்தூள், இறாலைச் சேர்த்துக் கலந்து வேக வைக்க வேண்டும் .
- இறால் வெந்ததும் கார்ன்ஃபிளாரை நீரில் கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும் .இப்பொழுது சுவையான இறால் சூப் தயார் .