Reading Time: 3 minutes

கட்டுரை: Scarborough Centre for Healthy Communities

தயவுசெய்து கவனிக்கவும் : சுவாசிய ஒத்திசைவு வைரஸ் (Respiratory Syncytial Virus) என்பது ஒரு தொற்றாகும். இது பொதுவாக ஆர்.எஸ்.வி (RSV) தொற்று என்று அழைக்கின்றோம்.

கனடாவில் ஆர்எஸ்விக்கு (RSV) எதிரான தடுப்பூசிகள் தற்போது கிடைக்கின்றன. — மேலும் ஆர்.எஸ்.வி (RSV) குறித்த கேள்விகளுக்கு வாக்ஸ் பேக்ட்ஸ்+ (VaxFacts+) கிளினிக்கின் மருத்துவர்கள் உங்களுக்கு பதிலளிக்கத் தயாராக உள்ளனர்.

ஆர்.எஸ்.வி (RSV) என்றால் என்ன?

சுவாசிய ஒத்திசைவு வைரஸ் (Respiratory Syncytial Virus) என்பது ஒரு தொற்றாகும். இது பொதுவாக ஆர்.எஸ்.வி (RSV) தொற்று என்று அழைக்கபடும். இது சில பிரிவினருக்கு முக்கிய உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, இருமல், சளி, மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சலுடன் கூடிய சுவாச நோய்களைப்போல இருக்கும்.

பெருமளவு பாதிக்கப்பட்டவர்களில், ஆர்.எஸ்.வி (RSV) மோசமான சுவாசப்பை தொற்றுக்களை அல்லது நிமோனியா (Pneumonia) போன்ற நோய்களை உண்டாக்கலாம், குறிப்பாக இந்த நபர்களுக்கு:

  • ஆறு மாதத்திற்கு குறைந்த குழந்தைகள்
  • 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள்
  • அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளுடன் வாழ்பவர்கள்

ஆர்.எஸ்.வி (RSV) எப்படி பரவுகிறது?

ஆர்.எஸ்.வி (RSV) தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் கைகளை நேரடியாக தொடுவதாலும், இருமல் அல்லது தும்மலின் போது வெளியேறும் துளிகள் மூலமாகவும் பரவுகிறது. இந்த வைரஸ் மிகவும் விரைவாக பரவக்கூடிய தன்மை உள்ளன. சிறு குழந்தைகள் அடிக்கடி ஒன்று கூடும் இடங்களில் இது மிக விரைவாக பரவும்.

குழந்தைகள்களுக்கு ஆர்.எஸ்.வி (RSV) தடுப்பு முறைகள் என்ன?

1.தடுப்பூசி எதிர்ப்பு பற்று (பேஃபோர்டஸ் – Beyfortus)
பேஃபோர்டஸ் (Beyfortus) என்பது குழந்தைகள்களுக்கு ஒருமுறை செலுத்தப்படும் எதிர்ப்பு மருந்தாகும்; இது ஆர்.எஸ்.வி (RSV) தொற்றிலிருந்து 6 மாதங்களுக்கு பாதுகாப்பை வழங்கும்.

பரிந்துரைக்கப்பட்ட மற்றும் காப்பீடு செய்யப்பட்டது:

  • ஆர்.எஸ்.வி (RSV) பருவத்தில் (நவம்பர் 2024 – மார்ச் 2025) பிறந்த குழந்தைகள்
  • 2024 ஆம் ஆண்டில், ஆர்.எஸ்.வி (RSV) பருவத்திற்கு முன் பிறந்த குழந்தைகள்
  • இரண்டாவது ஆர்.எஸ்.வி (RSV) பருவத்துக்கு செல்லும் 24 மாதம் வரை உயர் ஆபத்துள்ள குழந்தைகள்
  1. தாய்மார்களுக்கு ஆர்எஸ்.வி தடுப்பூசி (அப்ரிஸ்வோ – Abrysvo)
    • கர்ப்பிணி பெண்களுக்கு 32-36 வாரங்கள் முழுமையான கர்ப்பகாலத்தில் கொடுக்கப்படுகிறது
    • தாய் எதிர்ப்பு பற்று உருவாகி, அதை குழந்தைக்கு மாற்றி, குழந்தையின் முதல் ஆறு மாதங்கள் வரை பாதுகாப்பை வழங்குகிறது

குழந்தைகளுக்கு பேஃபோர்டஸ் (Beyfortus) பரிந்துரைக்கிறோம், ஏனென்றால் தாயின் தடுப்பூசியுடன் ஒப்பிடுகையில், தீவிரமான ஆர்.எஸ்.வி (RSV) தொற்றுகளுக்கு எதிராக இது சுமார் 80% சதவீதம் அதிக செயல்திறனை வழங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு பேஃபோர்டஸ் (Beyfortus) பாதுகாப்பானதா?

ஆம், பேஃபோர்டஸ் (Beyfortus) பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதை கனடாவின் சுகாதார அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. ஊசி போடப்பட்ட இடத்தில் லேசான வீக்கம் அல்லது வலி மற்றும் காய்ச்சல் பொதுவான பக்க விளைவுகளாகும். கடுமையான பக்க விளைவுகள் அரிதானவை.

குழந்தைகள் ஆர்.எஸ்.வி (RSV) தடுப்பை எங்கு பெறலாம்?

பேஃபோர்டஸ் (Beyfortus) பெரும்பாலும் பிறப்புக்குப் பின்னர் மருத்துவமனையில் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொது சுகாதார நிலையங்கள் வழியாக வழங்கப்படுகிறது.

ஆர்.எஸ்.வி( சுளுஏ) தடுப்பூசி பெறுவதற்கு தகுதியுடைய முதியவர்களும், அபாயத்தில் உள்ளவர்களும் யார்?

• ஒன்டாரியோ (Ontario) மாநிலத்தில், ஆர்.எஸ்.வி (RSV) தடுப்பூசி 60 வயதுக்கும் மேற்பட்ட அதிக ஆபத்துக்குள்ளாகும் மக்கள் தொகைக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது:
  •முதியோர் இல்லங்கள் மற்றும் நீண்ட கால பராமரிப்பு மையங்கள்.
•டயாலிசிஸ் (Dialysis) சிகிச்சை பெறும் நோயாளிகள், உறுப்புப் பரிமாற்றம் அல்லது நுண்கண தானம் (Stem Cell) பெற்றவர்கள்.
• வீடற்ற நிலையில் உள்ளவர்கள்
• முதல் நாட்சி மக்கள், இனூயிட், அல்லது மெட்டிஸ் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் (First Nations, Inuit, or Métis individuals)

மற்றவர்கள் ஆர்.எஸ்.வி (RSV) தடுப்பூசியை தனியார் வாங்குதலின் மூலம் பெற முடியும், சில சமயங்களில் காப்பீட்டால் (Insurance) கவரப்படும்.

முதியவர்களுக்கான ஆர்.எஸ்வி. (RSV) தடுப்பூசிகள் என்ன?

• அரெக்ஸ்வி (Arexvy): முதியவர்களுக்கு ஏற்படும் கடுமையான ஆர்.எஸ்.வி(RSV) நோயை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி.
• அப்ரிஸ்வோ (Abrysvo): ஆர்.எஸ்.வி (RSV) தொடர்புடைய கீழ் சுவாச பாதை தொற்று நோயைத் தடுப்பதில் செயல்திறமிக்க இருவகை தடுப்பூசி.

ஆர்.எஸ்.வி (RSV) தடுப்பூசியை மற்ற தடுப்பூசிகளுடன் கொடுக்கலாமா?

ஆம். ஆர்எஸ்வி தடுப்பூசியை காய்ச்சல் மற்றும் கோவிட்-19 போன்ற பருவ தடுப்பூசிகளுடன் ஒரே நேரத்தில் எடுப்பது பாதுகாப்பானது என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது சுவாச பாதை தொற்று இருப்பவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க உதவும்.

ஆர்.எஸ்.வி தடுப்பூசிகள் முதியவர்களுக்கு பாதுகாப்பானதா?

ஆர்.எஸ்.வி (RSV) தடுப்பூசிகளான அரெக்ஸ்வி (Arexvy) மற்றும் அப்ரைஸ்வோ (Abrysvo) இரண்டும் மிகவும் பாதுகாப்பானவை. குத்திய இடத்தில் சிறிய வலி, சோர்வு மற்றும் தலைவலி ஆகியவை பொதுவான பக்க விளைவுகளாகும்.

வாக்ஸ் பேக்ட்ஸ்+ (VaxFacts+) கிளினிக்கில் மருத்துவருடன் தொலைபேசி சந்திப்பை எப்படி பெறுவது?

நீங்கள் ஏதேனும் கேள்விகள், கவலைகள் இருந்தால் அல்லது ஒரு மருத்துவருடன் ஒத்திசைவு மற்றும் தீர்வு பெற இடம் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட, கருத்து விடுபட்ட இடத்தில் நேருக்கு நேர் பேசுவதன் மூலம் கூடுதல் விளக்கங்களைப் பெற விரும்பினால், தயவுசெய்து www.shn.ca/VaxFacts இல் ஒரு இலவச சந்திப்பு ஏற்பாடு செய்யவும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.