Reading Time: < 1 minute
தேவையானவை:
ஆட்டு ரத்தம் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் -250 கிராம்
பட்ட மிளகாய் – 5
உப்பு -தேவைக்கு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும்.
- பிறகு அதில் வெங்காயம்,பட்ட மிளகாய்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து நன்கு பிசையவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்த ரத்தத்தை சேர்த்து விடாமல் கிளறவும்.
- வெங்காயம் நன்கு வெந்து, ரத்தம் உறைந்ததும் கீழே இறக்கிவிட்டு பின் பரிமாறலாம்.