Reading Time: < 1 minute
கோவிட் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான மாத்திரை தயார். மொன்றியால் நிறுவனம் கண்டுபிடிப்பு!
COVID தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு மருந்து கனடா Montreal Heart Institute நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 4,159 நோயாளிகள் ஈடுபட்டனர்.
Colchicine என்ற பெயர் கொண்ட இந்த மாத்திரை ஏற்கனவே அறியப்பட்ட பிற நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய வைத்தியர் Jean-Claude Tardif, இது ஒரு “பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு” எனக் கூறினார்.
ஆய்வின் பகுப்பாய்வில், Colchicine மருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 25 சதவீதம் குறைத்துள்ளது. அதேவேளை இறப்புகள் 44 சதவீதம் குறைந்துள்ளது.