Reading Time: < 1 minute

கனடிய தேசிய கண்காட்சி (CNE) இம்மாதம் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 4, 2023 வரை நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்களுடன், CNE கண்காட்சி இடம்பெறுகின்றது. கனடாவின் மிகப்பெரிய வருடாந்திர கண்காட்சி இதுவாகும்.

முதல் கனடிய தேசிய கண்காட்சி 1879 இல் இடம்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் இந்த கண்காட்சி பெரும்பாலும் கனடாவில் விவசாயம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெறுகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு பிரமாண்டமாக வரும் வெள்ளிக்கிழமை பல்வேறு நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதில் சர்வதேச அரங்கில் தமிழ் நடனப்பள்ளி Prima Dance School மாணவர்களது நடனம் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

“ப்ரிமா நடனப் பள்ளி 2011 இல் நிறுவப்பட்டது, இது அனைவருக்குள்ளும் உள்ள நடன திறமைகளை வெளிக்கொணரும் நோக்கத்துடன். ப்ரிமா நடனப் பள்ளி செயல்படுகின்றது. ப்ரிமா நடனப் பள்ளியில் வயது அல்லது திறமை ஒருபோதும் வரம்பு இல்லை. திறமை நிலை எதுவாக இருந்தாலும் நடனக் கலையை வளர்க்கிறது. அவர்களின் திறமை மற்றும் நடன ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில், பிரைமா நடனப் பள்ளி ஆகஸ்ட் 18 அன்று CNE இன்டர்நேஷனல் அரங்கைக் அதிரவைக்கப்போகின்றது.” இவ்வாறு CNE தனது இணையப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

கனடா முழுவதும் உள்ள திறமையாளர்கள் இந்த மேடையில் தமது திறமையை வெளிப்படுத்துவது ஒரு கனவாய் உள்ள நிலையில், ஒரு தமிழ் பள்ளி அந்த இலக்கை அடைந்து அனைத்து தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

வாழ்த்துக்கள் Prima Dance School மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்.